மொபைல் செயலி மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்து 7 லட்சத்தை இழந்த 68 வயது முதியவர்!

Default Image

பெங்களூருவில் மொபைல் செயலி மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்து 7 லட்சத்தை இழந்த 68 வயது முதியவர்.

தற்போதைய நவீன காலகட்டத்தில் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே உணவுகள் வாங்கி சாப்பிடுவது, பொருட்கள் வாங்குவது, டிக்கெட் முன்பதிவு செய்வது மற்றும் ஆடைகள் வாங்குவது என வேலைகள் அனைத்தும் சுலபமாகிவிட்டது. இந்நிலையில், பலரும் தற்பொழுது விமான டிக்கெட் முன்பதிவுகளை மொபைல் செயலிகள் மூலமாகவே செய்து விடுகிறார்கள், இதனால் சிலர் ஏமாற்றமும் அடைகிறார்கள். அதில் ஒன்றாக தற்பொழுது பெங்களூருவை சேர்ந்த 68 வயதுடைய முதியவர் ஒருவர் விமான டிக்கெட்டை ஒரு மொபைல் செயலி மூலமாக 7 லட்சத்துக்கு முன்பதிவு செய்துள்ளார்.

அதன் பின் அவரது வங்கி கணக்கிலிருந்து 7 லட்சம் பணமும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்கள் பணம் பெறப்படவில்லை என அவருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வாடிக்கையாளர் சேவையை அழைத்த போது தொழில்நுட்ப சிக்கல்களால் பணம் கழிக்கப்பட்டதாகவும், அதை திருப்பி தர முடியாது. தங்களின் வேறொரு வாங்கி கணக்கை தாருங்கள் எனவும் கேட்டுள்ளார். அதன் பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் காவல்நிலையத்தை அணுகி இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஐடி சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்