கணவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியதை பொய் என நினைத்து, அதை வீடியோவாக பதிவு செய்த மனைவி மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் திருமணமாகிய 4 மாதத்தில் தம்பதிகள் இருவருக்கு இடையேயான முரண்பாடான வாழ்க்கை தற்போது ஒரு உயிரையே மாய்த்துள்ளது. மேற்குவங்கத்தில் வசித்து வரக்கூடிய அமோன் ஷா எனும் 25 வயதுடைய நபர் நேஹா எனும் 21 வயதுடைய பெண்ணை கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகி உள்ள நிலையில் இவர்களுக்கிடயே கருத்து வேறுபாடுகள் மற்றும் கசப்புகள் இருந்து வந்துள்ளது. திருமணத்திற்கு பின்பு டெல்லிக்கு சுற்றுப்பயணம் சென்று இவர்கள் வெளியில் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து செல்ல நேஹா முடிவெடுத்துள்ளார்.
அமோன் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பியுள்ளார். ஆனால், நேஹா அண்மையில் விவகாரத்திற்கு கோரியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்மையில் அமோன் ஷா தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது மனைவியிடம் கூறி உள்ளார். ஆனால் அவரது மனைவி எவ்வித பதற்றமும் இன்றி, அவர் தற்கொலை செய்து கொள்வதை வீடியோவாக எடுத்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து தற்கொலை செய்து கொண்ட அமோனின் உடலை கைப்பற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவரது குடும்பத்தினர் வேலூருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இதனை அடுத்து அமோனின் சகோதரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது, இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகம் இருந்ததாகவும், தனது சகோதரர் நேஹாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டதாகவும், ஆனால் நேஹா அதை மறுத்து வந்ததாகவும் அமோனின் சகோதரி தெரிவித்துள்ளார். மேலும், நேஹா மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து நேஹாவிடம் போலீசார் விசாரித்தபோது, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது கணவர் தன்னிடம் கூறினாலும், இது போல பல முறை மிரட்டியுள்ளதால்அவர் தன்னை மிரட்டுவதாக தான் அவர் நினைத்ததாகவும், எனவே தான் அதை வீடியோவாக எடுத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நேஹாவின் கருத்து சற்று முரண்பாடாக இருப்பதால் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது கணவர் தற்கொலை செய்துகொண்டதை மனைவி வீடியோவாக எடுத்து, கணவரின் உயிரும் தற்பொழுது பிரிந்துள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…