661 மீனவர்களை காணவில்லை : மத்திய அரசு தகவல்…!
ஓக்கி புயலுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 661 மீனவர்கள் கரை திரும்பவில்லை என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் 400 தமிழக மீனவர்களும் மற்றும் 261 கேரள மீனவர்களும் காணவில்லை என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 453 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 362 மீனவர்கள் உட்பட 845 பேர் மீட்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த மாதம் 30-ம் தேதி குமரி மற்றும் கேரளாவில் ஓகி புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மற்றும் விசைப்படகுகள் மூலம் ஆழ் கடலுக்குள் பல நாட்களுக்கு முன்பே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு ஓகி புயல் பற்றிய எச்சரிக்கை சரியாக தெரியாமல் இருந்ததால் இதனால் அவர்களும் புயலில் சிக்கி காணவில்லை, இதனால் தமிழகம் மற்றும் கேரளாவிலும் மொத்தம் 661 மீனவர்களை கரை திரும்பவில்லை என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது…
sources; dinasuvadu.com