இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் விடாத கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், சிக்கி 66 பேர் பலியாகினர்.
கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 66 பேர் உயிரிழந்ததாக இமாச்சல் பிரதேச முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இமாச்சல் பிரதேசம் சிம்லாவில் ஏற்பட்ட இரண்டு நிலசரிவுகளில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் பலர் இடுபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், இவர் இமாச்சல பிரதேசத்தின் டோராடூன், பவுரி, தெக்ரி, நைனிடால், மற்றும் உதம் சிங் நகர் போன்ற பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய புனித தலங்களுக்கு செல்லும் சாலை நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதனால், ஆன்மீக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அங்கு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக கங்கை. யமுனை போன்ற ஆறுகள் நிரம்பி வருகின்றன. நீர்நிலைகள் மீண்டும் நிரம்பி வெள்ள அபாயம் ஏற்படும் நிலையில் உள்ளதால் டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…