பாஸ்போர்ட் தொலைந்ததால் 18 வருடங்கள் பாகிஸ்தானில் கைதி ஆக்கப்பட்ட 65 வயது பெண்மணி விடுதலை!

Default Image

பாகிஸ்தானுக்கு சென்று இருந்த பொழுது பாஸ்போர்ட்டை தவறுதலாக தொலைத்ததால் சட்டவிரோதமாக குடியேறியதாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண்மணி 18 வருடங்களுக்கு பிறகு தற்போது விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்பியுள்ளார்.

இந்தியாவில் உள்ள அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த பெண்மணி ஹசீனா என்பவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சஹாரன்புர் பகுதியைச் சேர்ந்த தில்ஷாத் அகமது என்பவரின் மனைவி. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த பதினெட்டு வருடங்களுக்கு முன்பதாக ஹசீனா தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றிருந்த அவர் தவறுதலாக தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு செய்வதறியாது திகைத்த நிலையில், பாகிஸ்தான் போலீசாரின் பார்வையில் அவர் படவே இவர் சட்டவிரோதமாக குடியேறியதாகக் கூறி சிறையில் அடைத்துள்ளனர்.

தனது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக அவர் கூறினாலும், அவரது பேச்சு எடுபடவில்லை. எனவே, கடந்த பல வருடங்களாக சீனா பாகிஸ்தான் சிறையில் இருந்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது அவுரங்காபாத்தில் உள்ள ஹசீனாவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் ஹசீனா பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை குறித்து புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் ஹசீனா இந்தியாவை சேர்ந்தவர் தான் என்பதற்கான அடையாளங்களை காண்பித்து பாகிஸ்தானிடம் பேசவே அதன்பின் ஹசீனா விடுவிக்கப்பட்டுள்ளார்.

18 ஆண்டுகள் பாஸ்போர்ட் தொலைந்தால் பாகிஸ்தானில் சிக்கி தவித்த ஹசீனா தற்பொழுது தாயகம் திரும்பி உள்ளார். அவரை அவுரங்காபாத் போலீசார் மற்றும் அவரது உறவினர்கள் பூங்கொத்து கொடுத்து சந்தோஷத்துடன் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து சிறைவாசம் அனுபவித்த ஹசீனா கூறுகையில், பாகிஸ்தானில் ஏகப்பட்ட துயரங்களை அனுபவித்ததாகவும், நாட்டுக்கு திரும்பிய பிறகே தான் நிம்மதியாக உணர்வதாகவும், தற்பொழுது சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்கிறேன் எனவும், தன்னை விடுவித்து அவுரங்காபாத் போலீசாருக்கு நன்றி கடன் பட்டிருப்பதாகவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்