65 வயது முதியவரின் உதட்டில் கயிற்றை வைத்து தைத்து, தண்டவாளத்தில் கட்டிப்போட்ட வளர்ப்பு மகன்.
ஜார்கண்டில், பாலமு மாவட்டத்தின் உண்டாரி சாலை தொகுதியில் உள்ள பிதிஹாரா கிராமத்தில் வசிக்கும் 65 வயதான போலா ராம் என்ற முதியவரை அவரது வளர்ப்பு மகன், கயிற்றால் உதடுகளைத் தைத்து, கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு அருகிலுள்ள ரயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் கட்டி போட்டுள்ளார்.
இதனையடுத்து, ரயில் பாதையில் கட்டிபோடப்பட்டிருந்த முதியவரை பார்த்த கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முதியவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து அந்த முதியவர் போலீசாரிடம், செவ்வாய்க்கிழமை இரவு கழிப்பறைக்குச் சென்றதாகவும், அப்போது அவரை தாக்கி, கயிற்றால் உதடுகளைத் தைத்து, கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு அருகிலுள்ள ரயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் கட்டி போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பத்தின் பின்னணியில் போலா ராமின் இரண்டாவது மனைவியும் உள்ளதாக கூறப்படுகிறது. போலா ராம் தனது முதல் மனைவி காலமான பிறகு 2010 இல் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டது. ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த விஷயம் பஞ்சாயத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசார் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…