புதுச்சேரியில் புதிதாக 642 பேருக்கு கொரோனா தொற்று..! 4 பேர் உயிரிழப்பு..!
- புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 642 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- 4 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,648 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 8,516 பேருக்கு சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 642 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் 496, காரைக்காலில் 110, ஏனாம் பகுதியில் 22, மாகியில் 14 என மொத்தம் 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,748 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,648 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 932 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,247 ஆக அதிகரித்துள்ளது. தற்போது புதுச்சேரியில் 6,853 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.