பஞ்சாபின் இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 64 கிலோ ஹெரோயின் பறிமுதல் .!

Default Image

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாயும் ரவி ஆற்றில் இருந்து 64கிலோ ஹெரோயினை பிஎஸ்எஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாயும் ரவி ஆற்றில் இருந்து 64 கிலோ ஹெரோயினை பிஎஸ்எஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 64.33 கிலோ எடையுள்ள இந்த ஹெரோயினை 60 துணி பாக்கெட்டுகளாக நீண்ட துணி குழாயில் மறைத்து வைத்து, அதனை ஆற்றில் மதிக்கும் நீர் பதுமரகம் ஒன்றில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை 1500 மீட்டர் நீளமுள்ள நைலான் கயிறை உபயோகித்து அதை இழுக்க மருந்துகளின் சரக்குகளுடன் கட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தேரா பாபா நானக் அருகே நாங்லியில் எல்லையில் பணிபுரிந்து வந்த பிஎஸ்எஃப் அதிகாரிகள், அதிகாலை 2 மணியளவில் ஆற்றில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டத்தை கவனித்ததை அடுத்து, 64 கிலோ எடையுள்ள ஹெரோயின்களை பறிமுதல் செய்ததாக பிஎஸ்எஃப் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலான ராஜேஷ் சர்மா தெரிவித்துள்ளார். ஆனால் இருள் சூழ்ந்து இருந்ததால் கடத்தல்காரர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்