6 மாதத்தில் ரூ.1800 கோடிக்கு விற்பனையான 63 குடியிருப்புகள்.!

Default Image

தெற்கு மற்றும் மத்திய மும்பையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.1,800 கோடிக்கு 63 அடுக்குமாடி கட்டிடங்கள் விற்பனையாகி உள்ளன. இவற்றில் மிகவும் ஆடம்பரமான பிளாட்டுகளும் Duplex மற்றும் penthouse-களும் அடக்கம். இவை ஒவ்வொன்றுக்கும் ரூ.50 முதல் ரூ.78 கோடி வரை விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக Parel பகுதியில் இந்தியா புல்ஸ் நிறுவனம் 9,200 சதுர அடியில் கட்டிய Duplex ரூ.78.38 கோடிக்கு கடந்த நவம்பரில் விற்பனையாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அதே சமயம் மும்பையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் ரூ.62,000 கோடி மதிப்புள்ள 3,200 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்காமல் தேங்கி உள்ளதையும் கட்டுமானத் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்