புனேயில் 2.7 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 62 வயது மூதாட்டி …!
புனேயில் 62 வயதுடைய மூதாட்டி ஒருவர் 2.7 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புனேயில் உள்ள வகாட் எனும் பகுதியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் 62 வயது மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த 62 வயது மூதாட்டியிடம் இருந்து 68 ஆயிரத்து 50 ரூபாய் மதிப்புள்ள 2.7 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மூதாட்டி கலகடக் பகுதியை சேர்ந்த ராதா பாலு என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த மூதாட்டியிடம் இது குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.