மலையாள நடிகர் திலீப்பின் பிணாமி பாவனா கடத்தலின் பின்னால் ரூ.62 கோடி சொத்து – திடுக்கிடும் தகவல்
கேரள நடிகை பாவனா கடத்தப்பட்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
கேரளாவில், கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில், நடிகர் தீலீப் கைது செய்யப்பட்டுள்ளார். திலீப்பும், அவரின் முன்னாள் மனைவியுமான மஞ்சு வாரியர் மற்றும் பாவனா ஆகியோரும் ஒன்றாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். அப்போதுதான் நடிகை காவ்யா மாதவன் மீது திலீப்பிற்கு காதல் ஏற்பட்டது. இதை மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவித்துள்ளார். அதனால், மஞ்சு வாரியர், திலீப் தம்பதியினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதற்கிடையில், காவ்யா மாதவன் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திலிப்பிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, அவரிடமிருந்து மஞ்சு வாரியர் விவாகரத்து பெற்றுவிட்டார். மேலும், திலீப், காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார்.
தன்னுடைய காதல் விவகாரத்தை மனைவியிடம் அம்பலப்படுத்திய பாவனா மீது திலீப் ஏற்கனவே கோபத்தில் இருந்துள்ளார். எனவே, பாவனா பேரில் வாங்கிய சொத்துக்களை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு பாவனாவிடம் அவர் வற்புறுத்தினார் எனவும் ஆனால் அதற்கு பாவனா மறுத்துவிட்டதாகவும் முன்பு செய்திகள் வெளியானது. ஆனால், மஞ்சு வாரியரின் பெயரில் ரூ.62 கோடி நிலம் ஒன்றை திலீப் வாங்கினார் என்றும், அது தொடர்பாகவே பாவனா கடத்தல் மற்றும் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
அதாவது, தன்னிடம் விவாகரத்து பெற்ற மஞ்சு வாரியரிடமிருந்து, அந்த ரூ.62 கோடி சொத்து நிலத்தை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு திலீப் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு மஞ்சு வாரியர் மறுத்து விட்டதாக தெரிகிறது. எனவே, ஏற்கனவே பாவனாவின் மீது கோபத்தில் இருந்த திலீப், மஞ்சு வாரியரை மிரட்டுவதற்கான ஒரு டிரெய்லர் போலத்தான் பாவனா கடத்தலை பல்சர் சுனில் மூலம் அரங்கேற்றினார் என்பது தெரியவந்துள்ளது.