ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பேருக்கு ஏழுமலையான் தரிசனம்.! ஜூன் 8 முதல் பக்தர்களுக்கு அனுமதி.!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆந்திரா அரசு அனுமதி.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆந்திரா அரசு அனுமதி வழங்கியுள்ளது. வருகின்ற ஜூன் 8, 9ம் தேதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள், 10, 11ம் தேதிகளில் உள்ளூர் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தினமும் காலை 6.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தரிசனம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்கள். மேலும் ஒரு மணி நேரம் வி.ஐ.பி. தரிசனமும், அதற்குப்பின் சர்வ தரிசனம் தொடங்கப்பட உள்ளது. 3000 பேருக்கு ஆன்லைன் மூலமாகவும், 3000 பேருக்கு நேரடி தரிசன டிக்கெட் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது மேலும் நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் தயவுசெய்து ஏழுமலையான் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது