உத்திரப்பிரதேச வெள்ளத்தில் மூழ்கிய 600 கிராமங்கள்..!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 600 கிராமங்கள் நீருக்குள் மூழ்கியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன் இல்லாத அளவு இம்முறை அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தொடர்மழையால் கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் அருகில் உள்ள 600 கிராமங்கள் தற்போது தண்ணீருக்குள் மூழ்கிய நிலை உருவாகியுள்ளது.
மேலும் இதில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அங்கே நிவாரண பணிகளை அதிகமாக செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் பல கிராம மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையுடன் இணைந்து இந்திய ராணுவ வீரர்களும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.