அடுத்த ஐந்து ஆண்டுகளில் 600 வெளிநாட்டு நிறுவனகள்முதலீடு செய்ய உள்ளன இதில் பெரும்பாலும் சீன நிறுவங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. இதன் மூலம் 600 நிறுவங்கள் 8,500 கோடி டாலர் முதலீடு செய்ய இருக்கின்றன. இதன் மூலம் 7,00,000 வேலை வாய்ப்புகள் உரு வாகும் நிலை உருவாகி உள்ளது.
இந்தியாவை முதலீட்டு மையமாக மாற்றுவதற்குத் மத்திய அரசின் அந்நிய முதலீடு மேம்பாட்டு நிறுவனமான `இன்வெஸ்ட் இந்தியா’ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தொழில் தொடங்காத 200 நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுகுறித்து இன்வெஸ்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் தீபக் பாக்லா கூறுகையில், “அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கோடி டாலர் அந்நிய முதலீட்டை இந்தியாவுக்குக் கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளோம். 70 நாட்கள் இந்தியா முழுவதும் சென்று ஆராய்ச்சி செய்துள்ளோம். எங்கெங்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, எந்தத் தொழிலுக்கு எந்த இடம் சரியாக இருக்கும் என்பது குறித்து நீண்ட ஆராய்ச்சி நடத்தியிருக்கிறோம்’’ என்றார்.
2017-ம் அந்நிய நேரடி முதலீடு 4,300 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் முந்தைய நிதி ஆண்டை விட 9 சதவீதம் அதிகரித்துள்ளது..
சர்வதேச அளவில் இன்ஜினீயரிங் பொருட்கள் தயாரிப்பில் மிகப் பெரிய நிறுவனமாக விளங்கும் சீனாவைச் சேர்ந்த சானி ஹெவி இண்டஸ்ட்ரி நிறுவனம் இந்தியாவில் 980 கோடி டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அமேசான் தவிர, பசிபிக் கன்ஸ்ட்ரக்ஸன், சீனா பார்ச்சூன் லேண்ட் டெவெலப்மெண்ட் மற்றும் டாலியான் வாண்டா போன்ற சீன நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கின்றன. இதில் ஒவ்வொரு நிறுவனமும் 500 கோடி டாலருக்கு மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
இன்வெஸ்ட் இந்தியா தகவலின்படி, ஏற்கெனவே 743 கோடி டாலர் முதலீடு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் 1,00,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 370 கோடி டாலரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெர்டாமான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 300 கோடி டாலரும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன.
இன்வெஸ்ட் இந்தியா நிறுவனம் முதலீட்டாளர்களை சந்தித்து தொழில்வாய்ப்புகள், தொழில் தொடங்குவதற்கான இடங்கள் மற்றும் கொள்கைகளை விளக்கி முதலீடு செய்வதை ஊக்குவித்து வருகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்நிய முதலீடுகளில் 42 சதவீதம் சீன நிறுவனங்களும். அமெரிக்காவிலிருந்து 24 சதவீதமும் இங்கிலாந்திலிருந்து 11 சதவீத முதலீடுகளும் வருகின்றன.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…