600 பேர் உ.பி.யில் விடைத்தாளை மாற்றி எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றதாக புகார்!

Default Image

உத்தரப்பிரதேசத்தில் 600 மருத்துவ மாணவர்கள் விடைத்தாளை பணம் கொடுத்து மாற்றி, எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முசாபர்பூரில் பல்கலைக்கழக அறையில் இருந்த எம்.பி.பி.எஸ். விடைத்தாளை மாற்ற மாஃபியா கும்பலிடம் பணம் கொடுத்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், எம்.பி.பி.எஸ். மாணவர்களின் விடைத்தளை நிபுணர்கள் மூலம் எழுதி, அதை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பான அறையில் உள்ள விடைத்தாளுக்கு பதிலாக மாற்றி வைத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக, விடைத்தாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரையும், எம்.பி.ஏ. போன்றவற்றை படிக்கும் மாணவர்களிடம் 40 ஆயிரம் ரூபாய் வரையும் வாங்கியுள்ளனர். இத்தகைய முறைகேடு மூலம் 600 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்கலாம் என்று கூறப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்