இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்ற 6 சிங்க பெண்கள்..!

Default Image

2021 இல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டள்ளது. 

உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களைப் பற்றிய தகவலை வழங்கும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2021 ஆம் ஆண்டின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 100 இந்திய பணக்காரர்களின் பட்டியலில் ஆறு பெண் தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பெயர்களில் முதல் பெயர் சாவித்திரி ஜிண்டால், வினோத் ராய் குப்தா, லீனா திவாரி, திவ்யா கோகுல்நாத், கிரண் மசும்தார் ஷா மற்றும் மல்லிகா சீனிவாசன் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

1.சாவித்திரி ஜிண்டால்:

ஃபோர்ப்ஸ் பட்டியலின் படி, இந்தியாவின் பணக்கார பெண் சாவித்திரி ஜிண்டால் இந்த பட்டியலில் சாவித்திரி ஜிண்டால் ஏழாவது இடத்தில் உள்ளார். அவர் ஓபி ஜிண்டால் குழுமத்தின் தலைவர். 2020 ஆம் ஆண்டில், அவரது சொத்து மதிப்பு 6.6  பில்லியன் டாலராக இருந்தது. இந்த ஆண்டு 18 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.  2005 இல் ஹெலிகாப்டர் விபத்தில் OP ஜிண்டால் இறந்த பிறகு, குழு நிறுவனங்கள் அவரது நான்கு மகன்களிடையே பிரிக்கப்பட்டது.

2. வினோத் ராய் குப்தா:

இந்தியாவின் பணக்கார பட்டியலில் வினோத் ராய் குப்தா 24 வது இடத்தில் உள்ளார். 2021 இல் அவரது சொத்து மதிப்பு 7.6 பில்லியன் ஆகும். 2020 ஆம் ஆண்டில், அவரது சொத்து மதிப்பு 3.55 பில்லியன் டாலராக இருந்தது.

 

3. லீனா திவாரி:
இந்தியாவின் பணக்கார பட்டியலில் லீனா திவாரி 43 வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 3 பில்லியனில் இருந்து 4.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. லீனா திவாரி யுஎஸ்வி இந்தியா என்ற மருந்துக் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

4. திவ்யா கோகுல்நாத்:
இந்தியாவின் பணக்கார பட்டியலில் திவ்யா கோகுல்நாத் 47 வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 2021 ஆம் ஆண்டில் $ 4.05 பில்லியனாக உள்ளது. கடந்த ஆண்டு  $ 3.05 பில்லியனாக இருந்தது.

5. கிரண் மஜும்தார் ஷா:

இந்தியாவின் பணக்கார பட்டியலில் கிரண் மசும்தார் ஷா 53 வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து கடந்த ஆண்டு $ 4.6 பில்லியனில் இருந்து. 3.9 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இவர் பயோகான் நிறுவனர் ஆவார்.

6. மல்லிகா சீனிவாசன்:
இந்தியாவின் பணக்கார பட்டியலில் மல்லிகா சீனிவாசன் 73 வது இடத்தில் உள்ளார். 2021 ல் மல்லிகாவின் சொத்து மதிப்பு 2.89 பில்லியன் டாலராக உள்ளது. அவர் டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். இந்த நிறுவனம் 1960 இல் தொடங்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்