ஜம்மு காஷ்மீரில் ஆனந்த்நாக் மற்றும் குல்காம் பகுதிகளில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆனந்த்நாக் மற்றும் குல்காம் பகுதிகளில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து அப்பகுதியில் சுற்றி வளைத்து பாதுகாப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில் 4 பேர் இதுவரை அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களில் 2 பேர் பாகிஸ்தானை சார்ந்தவர்களும், 2 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற 02 பயங்கரவாதிகளின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…