ரூ 40,000,00,00,000 செலவில் 6 நீர்மூழ்கி கப்பல்கள்…!!
இந்திய கப்பற்படைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி செலவு செய்து 6 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருக்கின்றது.
இந்திய கப்பற்படைக்கு சொந்த நாட்டிலேயே 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திட்டத்த்தை செயல்படுத்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இந்த ஒப்புதளுக்கான முன்மாதிரியை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்கு இந்தியாவில் உள்ள சில தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு பாதுகாப்பு தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுமென அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.