மத்திய பிரதேசம் மோரினா மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு கலப்பட பால் விற்பனை செய்வதாக மத்திய பிரதேச மாநில போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலை தொடர்ந்து நேற்று முன்தினம் சுமார் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அந்த சோதனையில் 10,000 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த அந்த கலப்பட பாலில் ஷாம்பு ,சோப்பு பவுடர் , சோடியம் தையோசல் போன்ற ரசாயன பொருள்கள் கலந்து இருந்தது ஆய்வில் தெரியவந்தது.மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி, உத்தரபிரதேசம் , ராஜஸ்தான், ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த கலப்பட பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 62 பேர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில் , சுமார் 30 சதவீத பால் மற்றும் 70 சதவீத மலிவான ரசாயனங்களைப் பயன்படுத்தி இந்த கலப்பட பால் தயார் செய்கின்றனர்.அந்த ஒரு லிட்டர் கலப்பட பால் செய்ய 5 ரூபாய் செலவாகிறது. ஆனால் அந்தப் பாலை 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இவர்கள் சந்தையில் பிரபலமாக இருக்கும் நிறுவங்களின் பெயரை கொண்டு இந்த கலப்பட பால் விற்பனை செய்து வருகிறார்கள் என கூறினர்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…