6-மாநிலங்களில் கலப்பட பால்! ரூ.5-க்கு தயாரித்து 50-க்கு விற்பனை!

Default Image

மத்திய பிரதேசம் மோரினா மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு கலப்பட பால் விற்பனை செய்வதாக மத்திய பிரதேச மாநில போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலை தொடர்ந்து நேற்று முன்தினம் சுமார் 12-க்கும்  மேற்பட்ட இடங்களில் போலீசார் அதிரடி  சோதனை நடத்தினர்.அந்த சோதனையில் 10,000 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த அந்த கலப்பட பாலில் ஷாம்பு ,சோப்பு  பவுடர் , சோடியம் தையோசல் போன்ற  ரசாயன பொருள்கள் கலந்து இருந்தது ஆய்வில் தெரியவந்தது.மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி, உத்தரபிரதேசம் , ராஜஸ்தான், ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த கலப்பட பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 62 பேர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில் , சுமார் 30 சதவீத பால் மற்றும் 70 சதவீத மலிவான ரசாயனங்களைப் பயன்படுத்தி இந்த கலப்பட பால் தயார் செய்கின்றனர்.அந்த ஒரு லிட்டர் கலப்பட பால் செய்ய 5 ரூபாய் செலவாகிறது. ஆனால் அந்தப் பாலை 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை  செய்கின்றனர். இவர்கள் சந்தையில் பிரபலமாக இருக்கும் நிறுவங்களின் பெயரை கொண்டு  இந்த கலப்பட பால் விற்பனை செய்து வருகிறார்கள் என கூறினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்