Fire Accident [file image]
சென்னை: ஆந்திரப் பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதி தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலம் பால்நாடு மாவட்டத்தில் வாக்களித்துவிட்டு ஊர்திரும்பிய 6 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். ஐதராபாத்தைச் சேர்ந்த 30 பேர் தனியார் பேருந்தில் சின்னகஞ்சம் என்னும் சொந்த ஊருக்கு வாக்களிக்கச் சென்றுள்ளனர். நேற்று இரவு அவர்கள் வீடு திரும்பும்போது பேருந்து லாரியின் மீது மோதியது.
முதலில் லாரி தீப்பிடித்த நிலையில், பேருந்துக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் சிக்கி, 2 ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இரு ஓட்டுநர்களும் மதுபோதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கின்றனர்.
விபத்து நிகழந்ததும், தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தது ஆனால் அதற்குள் இரண்டு வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. காயமடைந்தவர்கள் சிலகலுரிப்பேட்டை மற்றும் குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…