சென்னை: மகாராஷ்டிரா, தானே பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே தானேவில் டோம்பிவாலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று அடுத்தடுத்து பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையில் தீ பற்றியது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து குறித்து பதிவிட்டுள்ள மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த விபத்தில் இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். மேலும், தனியார் கெமிக்கல் ஆலையில் பாய்லர் வெடித்து சிதறிய சம்பவம் சோகமானது. இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் நிகழ்ந்த 10 நிமிடங்களில் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆலையில் ஏற்பட்டுளள தீயை அணைக்க 15 தீயணைப்பு இன்ஜின்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரசாயன தொழிற்சாலை என்பதால் இங்கு ஏற்பட்டுள்ள தீயை அணைக்க குறைந்தது 4 மணி நேரம் ஆகும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…