Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இதில் 7 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெரிசல் மிகுந்த ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றத்தை உண்டாகியுள்ளது.
தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பாதுகாப்பு விதிகளை சரியாக பின்பற்றாததே இந்த விபத்துக்கு காரணம் எனவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…