கிளவுஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலி.!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த சிலர் தீவிபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மின்கசிவு விபத்துக்கான காரணமாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். தகவலின்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இரவு நேரத்தில் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாகவும், தீ விபத்து ஏற்பட்ட போது, வேலை செய்பவர்கள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.