பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள நீல்காந்த் என்ற தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்கள் ஒரு பக்கமிருக்க, ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் நோயாளிகள் உயிரிழகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள நீல்காந்த் என்ற தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 5 நோயாளிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகளில் ஒருவர் கூறுகையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினோம்.
மேலும் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு குடும்பத்தினரிடம் கூறி விட்டதாக அவர் தெரிவித்தார். நான்கு நாட்களுக்கு பின் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாக மாவட்ட நிர்வாகமும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தனர் என தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…