குஜராத்தில் ரூ.480 கோடி போதைப்பொருள் பறிமுதல்.. 6 பாகிஸ்தானியர்கள் கைது!
Gujarat : குஜராத்தில் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக நாட்டில் போதைப்பொருட்கள் கடத்தல் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள சுமார் 80 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Read More – ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் விபத்து!
பல்வேறு தகவலின்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சோதனையில் ஈடுபட்டதில் குஜராத் கடற்பகுதியில் இருந்து போதைப்பொருள் பிடிபட்டது. போர்பந்தர் துறைமுகம் அருகே படகில் போதைப்பொருட்களை கடத்திய 6 பாகிஸ்தானியர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More – ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு.!
இதுவரை பல்வேறு சோதனைகளில் ரூ.3,135 கோடி மதிப்புள்ள மதிப்பிலான 517 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளில் கடலோர காவல்படை, ஏடிஎஸ் மற்றும் என்சிபி ஆகியவை இணைந்து ரூ.3135 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளது.
Read More – குடியுரிமை பெற புதிய இணையதளம்… அறிமுகம் செய்தது மத்திய அரசு!
இதனிடையே, கடந்த 30 நாட்களில் குஜராத்தில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பிடிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் பிப்.28ம் தேதி படகு ஒன்றில் இருந்து சுமார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 3,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது ரூ.480 கோடி மதிப்புள்ள சுமார் 80 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.