16 வயது பழங்குடியின சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த 6 ஆண்கள் கைது!
16 வயது சிறுமியை ஒரே நேரத்தில் பலாத்காரம் செய்து கொலை செய்த 6 ஆண்கள் சத்தீஸ்கரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டது. மேலும் சிறுமி என்று கூட பாராமல் பலர் பலாத்காரம் செய்யக்கடிய சம்பவமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 16 வயது மட்டுமே ஆகக்கூடிய பழங்குடியின சிறுமி ஒருவரை 6 ஆண்கள் சேர்ந்து பலாத்காரம் செய்து கற்களால் அடித்து கொலை செய்துள்ளனர். மேலும் அந்த சிறுமியுடன் இருந்த அவரது தந்தை மற்றும் 4 வயது சிறுமியும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். சாந்த்ரம் மஜ்வர், அப்துல் ஜபார், அனில் குமார் சர்தி , பர்தேஷி ராம் பானிகா, ஆனந்த் ராம் பானிகா, உம்ஷங்கர் யாதவ் ஆகியோர் தான் கைது செய்யப்பட்டுள்ளனராம். கொலை செய்த மூவரையும் ஒரு மலையடிவாரத்தில் உள்ள காட்டில் வீசியதாகவும் குற்றவாளிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 6 பேர் மீதும் ஐபிசி பிரிவு 302 கொலை வழக்கு, பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.