ஆந்திராவில் முன்விரோதம் காரணமாக 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஜூட்டாடா எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடிய ராமாராவ் மற்றும் உஷா ஆகிய தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு மகனும் 2 மாதத்தில் பச்சிளம் குழந்தை ஒன்றும் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ராமராவ் வீட்டிற்கு அவரது உறவினர்கள் ஆகிய ராமா தேவி மற்றும் அருணா ஆகியோர் குழந்தையை பார்ப்பதற்காக வந்துள்ளனர். அவர்கள் இருவரும் தம்பதியினரின் கட்டாயத்தின் பேரில் சில தினங்களுக்கு வீட்டிலேயே தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் ராமராவுக்கு அதே பகுதியை சேர்ந்த அப்பள ராஜூ என்பவருடன் கடந்த 2018 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பள ராஜூ தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் ஜூட்டாடா கிராமத்திற்கு திரும்பிய அப்பளராஜு ராமாராவ் உடன் அவருக்கு இந்த முன்விரோதத்தினை ஈடுகட்ட ராமாராவை பழிவாங்க வேண்டும் என நினைத்துள்ளார்.
அன்று ராமராவ் தனது குழந்தை மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக தெருவில் நடந்து செல்வதை பார்த்த அப்பள ராஜூ அவரை தீர்த்துக்கட்ட நினைத்துள்ளார். இந்நிலையில், அப்பளராஜு நேற்று முன்தினம் ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், ராமராவ் வீட்டிற்கு சென்று மெல்லமாக கதவை தட்டியுள்ளார். தூக்க கலக்கத்தில் ராமராவ் வந்து கதவை திறக்க கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டி கொலை செய்த அப்பள ராஜூ, அதன்பின் தப்ப முயன்று உள்ளார். ஆனால் ராமாராவ் கொலை செய்யப்பட்டதை அறிந்து குடும்பத்தினர் அலறி சத்தம் போடவே குடும்பத்தினரையும் கொலை செய்ய முடிவு செய்து, அவரது மனைவி மற்றும் உறவினர்களை கொன்றுள்ளார். அதன்பின் இரண்டு வயது மற்றும் இரண்டு மாதம் கொண்ட இரண்டு குழந்தைகளையும் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளான்.
கொலை செய்யும் பொழுது ஒவ்வொருவரும் கூச்சலிட்ட சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரித்ததில், அப்பளராஜு தான் கொலைக்கு காரணம் என ஊர்மக்கள் கூறியதை அடுத்து அப்பள ராஜூவின் வீட்டில் சென்று பார்த் காவல்துறையினர் ரத்தக்கறையுடன் ராஜு தூக்கிக்கொண்டிருப்பதை கண்டுள்ளனர். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். கொலை செய்யப்பட்ட ராமாராவ் அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் ஆகிய 6 பேரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…