எரிவாவு சிலிண்டெர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி.!
ஹரியானா மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர் (LPG) வெடித்ததில் ஒரேய குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
ஹரியானா மாநிலத்தில் பானிபட் நகரில் எரிவாயு சிலிண்டர் (LPG) வெடித்ததில் கணவன், மனைவி மற்றும் அவர்களது நான்கு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் ,அவரது மனைவி அஃப்ரோஜ் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேற்கு வங்காளத்திலிருந்து குடும்பத்துடன் வெளியேறி ஹரியானாவில் குடியேறிய தொழிலாளி அப்துல் கரீம் என்பவர். இவர் ஹரியானாவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். காலை 6.30 மணியளவில் உணவு சமைக்கும் போது எரிவாயு சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீயில் சிக்கி அனைவரும் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேற்கு வங்கத்தில் உள்ள கரீமின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.