ஒடிசா சட்டசபையில் திடீரென புகுந்த 6 அடி சாரைப்பாம்பு!

ஒடிசா சட்டசபையில் நுழைந்த 6 அடி நீள சாரைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டுள்ளனர்.
ஒடிசா சட்டசபையில் எதிர்பாராதவிதமாக 6 அடி நீள சாரைப்பாம்பு நுழைந்துள்ளது. சட்டசபையின் பாதுகாவல் அறையில் பதுக்கி இருந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, வன அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அங்கு வந்த வன அலுவலர்கள் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின் செடிகளுக்கு நடுவில் பதுங்கி இருந்த பாம்பை வனத்துறையினர் பத்திரமாகப் பிடித்துக்கொண்டு போய் வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர்.