இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று காலை 7 தொழிலாளர்கள் பயணித்த வாகனம் ஒன்று விபத்து ஏற்பட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மஹிந்திரா பிக்கப் வாகனம் மூலம் 7 தொழிலாளர்கள் மண்டியிலிருந்து, சுந்தர்நகருக்கு சென்று கொண்டிருந்தபோது ஆற்றில் வாகனம் விழுந்தபோது ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், காயமடைந்த ஒருவர் மண்டல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
பயணிகள் அனைவரும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று மண்டி காவல் கண்காணிப்பாளர் ஷாலினி அக்னிஹோத்ரி தெரிவித்தார். இந்த விபத்து குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
ஹிமாச்சல பிரதேச விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து அறிந்து பிரதமர் மோடி தனது வருத்தத்தைத் தெரிவித்ததோடு, துக்கமடைந்த குடும்ப உறுப்பினர்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார். அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், காயமடைந்தவர்களுக்கு விரைவாக குணமடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…