ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கப்படும்…! கேரளாவில் பாஜக தேர்தல் வாக்குறுதி…!
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று, பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
கேரளாவில் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில், கேரள சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலம் இல்லாத ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட குடும்பத்திற்கும், ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.