#BREAKING : நீரஜ் சோப்ராவுக்கு 6 கோடி பரிசுத்தொகை ..,ஹரியானா அரசு அறிவிப்பு..!
தங்கம் வென்ற நிராஜ் சோப்ராவுக்கும் ரூ.6 கோடி என ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நிராஜ் சோப்ராவுக்கும் 6 கோடி பரிசுத் தொகையை ஹரியானா அரசு அறிவித்துள்ளது. மேலும், கிரேடு 1 இல் அரசு பணியும் வழங்கப்படும் எனவும் பஞ்ச்குலாவில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பான மையத்தை நாங்கள் உருவாக்குவோம். அங்கு அவர் விரும்பினால் அவர் தலைவராக இருப்பார் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்:ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாள் மீராபாய் சானுவின் வெள்ளி பதகத்துடன் இந்தியா பதக்கத்தை தொடங்கியது. இறுதி நாள் நீரஜ் சோப்ராவின் தங்கத்துடன் பிரகாசமாக நிறைவடைந்துள்ளது.
Neeraj Chopra will be given Rs 6 crore & a class I category job as per our policy. We will be building a Centre of Excellence for athletes in Panchkula, where he will be the head if he wants. He will be given a plot with 50% concession, like other players: Haryana CM ML Khattar pic.twitter.com/ZubViQdSQ1
— ANI (@ANI) August 7, 2021