திருவானந்தபுரம், அனட் பகுதியை சேர்ந்தவர், தொழிலதிபர் அஜி குமார். இவர், தனது மனைவி லேகா, மகன் அகிலேஷ் மற்றும் மகள் அகிலாவுடன் கட்டயீக்கோணம் பகுதியில் வசித்து வந்தார். இவரின் மகன், தம்பனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
அகிலேஷிடம் விலையுயர்ந்த ஆறு பைக் மற்றும் ஒரு சொகுசு காரும் உள்ளது. இதனை தொடர்ந்து, அகிலேஷ் அவரின் தந்தையிடம் 14 லட்சம் மதிப்புள்ள ஒரு பைக்கை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அனால் அவர் தந்தை, ஏற்கனவே 6 பைக் இருந்ததால், அதனை வாங்கி தர மறுத்தார்.
இதனால் அவர் தனது தந்தையிடம் கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்தார். ஒருசில மாதங்களில் அந்த பைக்கை தந்தை வாங்கி தருவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், அவரின் நம்பிக்கை குறைந்தது. இந்நிலையில், 19ஆம் தேதி இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அகிலேஷ் இருந்த அறையின் கதவு திறக்கவில்லை.
சந்தேகமடைந்த அவரின் பெற்றோர், அரை கதவை உடைத்து பார்த்தபொது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடலை கைப்பற்றிய காவல்துறையினர், மருத்துவமனைக்கு அனுப்பினார். அதன் பின், நேற்று மாலை அவரின் உடல் அனட் பகுதியில் தகனம் செய்யப்பட்டது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…