1 கோடி மதிப்புடைய பாம்பு விஷம் கடத்தலில் ஒடிசாவில் 6 பேர் கைது
பாம்பு விஷம் கடத்தியதாக புவனேஷ்வர் வனத்துறை அதிகாரிகளால் ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் (டி.எஃப்.ஓ) அசோக் மிஸ்ரா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஒரு லிட்டர் பாம்பு விஷம் மற்றும் ஐந்து குப்பிகளை தலா ஐந்து மில்லிலிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கடத்தலில் பாலசூரைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மூன்று பேர் ரூ .10 லட்சத்திற்கு விற்க முயன்றுள்ளனர்.இது சர்வதேச சந்தையில் ரூ .1 கோடிக்கு மேல் மதிப்புடையதாகும்.
ஒரு லிட்டர் விஷத்தை சேகரிக்க சுமார் 200 நாகப்பாம்புகள் தேவை என்றும் இந்த வழக்கில் தொடர்புடைய 6 நபர்கள் 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், பிரிவு 9, 39, 44, 49 மற்றும் 51 ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மிஸ்ரா தெரிவித்தார்.