#BigNews:அசாமில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
இன்று காலை அசாமில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது வடகிழக்கு மற்றும் வடக்கு வங்கத்தின் சில பகுதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுவரை அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை என்றாலும், உடைந்த சுவர்கள் மற்றும் ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் ஏற்பட்ட விரிசல்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Few early pictures of damage in Guwahati. pic.twitter.com/lTIGwBKIPV
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 28, 2021
வடகிழக்கு மற்றும் அண்டை நாடான பூட்டானின் பல பகுதிகளில் பலத்த நிலநடுக்கம் மீண்டும் மீண்டும் உணரப்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறியுறுத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
குவாஹாட்டிக்கு வடக்கே 140 கி.மீ (86 மைல்) தொலைவில் உள்ள தேக்கியாஜுலி நகரத்திற்கு அருகில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது.காலை 7:51 மணிக்கு மேற்பரப்பில் இருந்து 17 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவலுடன் பேசியதாகவும், மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று கூறியுள்ளதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Spoke to Assam CM Shri @sarbanandsonwal Ji regarding the earthquake in parts of the state. Assured all possible help from the Centre. I pray for the well-being of the people of Assam.
— Narendra Modi (@narendramodi) April 28, 2021