6வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்..! விலைவாசி உயரும் அபாயம்..!
6வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது.லாரிகள் ஓடாததால் மினி ஆட்டோக்களில் காய்கறிகளை ஏற்றிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
டீசல் மற்றும் பெட்ரோல் மீதான வாட் வரி மற்றும் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் நீக்கிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் என நான்கு சிறப்பம்சங்கள் கொண்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடத்தி வருகின்றனர்.
இதனால் நாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வர்த்தகத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை வந்துள்ளது.
நாட்டிற்கு பல லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டாலும் எங்களுக்கு செவி சாய்க்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.