உ.பி.யின் ஷாம்லி மாவட்டத்தில் 33 வயது நபர் தனது ஐந்து வயது மருமகள் சாப்பிடும் நேரத்தில் மாம்பழம் கேட்டு அடம்பிடித்ததால் அவளைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பலமுறை மாம்பழம் கேட்டதால் ஆத்திரமடைந்த அவர், முதலில் தடியால் தலையில் அடித்ததாகவும், ரத்தம் வர ஆரம்பித்ததும், பீதியடைந்து, கழுத்தை அறுத்ததாகவும், பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டையில் அடைத்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
ஷாம்லியின் கெரா குர்தான் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. கூலித்தொழிலாளியின் மகள் கைரு நிஷா மதியம் காணாமல் போனார். அன்றிரவு சிறுமியின் மாமா குற்றவாளி உமர்தீனின் வீட்டில் சிறுமியின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியைத் தேடி கிராம மக்களுடன் சென்றதாகவும், ஆனால் போலீசார் அவரை சந்தேகித்தபோது, அவர் உடனடியாக காணாமல் போனதாகவும் போலீசார் கூறினர்.
குற்றம் சாட்டப்பட்ட உமர்தீனை கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து போலீசார் கைது செய்துள்ளதாகவும், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் (கத்தி மற்றும் இரும்பு கம்பி) அவரிடமிருந்து மீட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் தந்தையின் புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஐபிசியின் 302 (கொலை) பிரிவின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…