உலக தடகள சாம்பியன்ஷிப்: தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு 5வது இடம்!
2023 உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவு 4×400மீ தொடர் ஓட்டத்தில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்தது. ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா 2:59:92 வினாடிகளில் வெற்றி பெற்றது.
இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் முஹம்மது அனஸ், அமோஸ் ஜேக்கப், அஜ்மல் வரியத்தொடி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் இலக்கை 2:59.92 வினாடிகளில் அடைந்தனர். அமெரிக்க வீரர்கள் இலக்கை 2:57.31 வினாடிகளில் முடித்து தங்கப் பதக்கத்தை வென்றனர். பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜமைக்கா 2, 3 மற்றும் 4 இடங்களைப் பிடித்தன.
பிரான்ஸ், 2:58.45 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது, அதே நேரத்தில் கிரேட் பிரிட்டன் பந்தயத்தை 2:58.71 வினாடிகளில் முடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது. தகுதிச் சுற்றில், இந்தியா, கிரேட் பிரிட்டன் ஆகிய இரு அணிகளும் 2:59:42 வினாடிகளில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களைப் பிடித்ததன் மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்குத் தானாக தகுதி பெற்றது.