கேரளாவில் 5வது நபருக்கு குரங்கு அம்மை தொற்று கண்டுபிடிப்பு.!
கடந்த மாதம் 27ஆம் தேதி துபாயில் இருந்து வந்த 30வயது மதிக்கத்தக்க நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ள்ளது.
தற்போது இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று சிறியதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒற்றைப்படையில் எட்டி பார்க்க ஆரம்பித்து உள்ளது.
ஏற்கனவே, கேரளாவில் 4ஆகவும், இந்திய முழுக்க 6ஆகவும் இருந்த குரங்கு அம்மை தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, தற்போது ஒன்று கூடியுள்ளது.
ஆம், கடந்த மாதம் 27ஆம் தேதி, துபாயில் இருந்து, கேரளா கோழிக்கூடு விமான நிலையம் வந்த 30 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி இருந்ததை பார்த்து பின்னர், அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னர்,
அவருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதியானது. தற்போது அவருக்கு மலப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் குரங்கு அம்மை எண்ணிக்கை 7ஆகவும், கேரளாவில் குரங்கு அம்மை எண்ணிக்கை 5ஆகவும் உயர்ந்துள்ளது.