உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதிய 5-ம் வகுப்பு மாணவி…! நெகிழ்ச்சியடைந்த தலைமை நீதிபதி..!
- உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதிய 5-ம் வகுப்பு மாணவி.
- மாணவியின் கடிதத்திற்கு, பதிலளித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா.
கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த 10 வயது மாணவி லிட்வினா ஜோசப். இவர் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆவார். இந்த மாணவி, ழுழு நீளத் தாளில் மடல் போல கோடுகளுக்கு நடுவே ஆங்கிலத்தில் உச்சநீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘கொரோனா தடுப்பு பணிகளிலும், மக்களின் உயிர்களை காப்பதிலும் உச்சநீதிமன்றத்தின் பங்கை செய்தித்தாள்களில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். ஆக்சிஜன் ஒதுக்கீடு விஷயத்தில் துரிதமாக செயல்பட்டு மக்களின் உயிரை உச்ச நீதிமன்றம் காப்பாற்றியுள்ளது எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
இந்தியாவில் கொரோனா பரவலை குறைப்பதிலும், மரணங்களை தடுப்பதிலும் உச்சநீதிமன்றத்தின் பங்கை உணர்கிறேன். முக்கியமாக டெல்லியில் நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியது. நீதிபதிகளுக்கு மிகவும் நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்.’ என எழுதியுள்ளார். மேலும், இந்த கடிதத்தில் மிகவும் அழகான புகைப்படத்தையும் வரைந்திருந்தார்.
மாணவியின் இந்த கடிதத்திற்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதிலளித்துள்ளார். அவர், ‘இந்த வயதில் தினசரி செய்திகளையும், நாட்டில் என்ன நடக்கிறது என்பதையும் தொடர்ந்து பின்பற்றுவது எனக்கு வியப்பளிக்கிறது. இந்த காலத்தில் மக்களின் நல் வாழ்க்கை குறித்து உன்னுடைய நாட்டின் பற்று, கவலை எனக்கு வியப்பளிக்கிறது. நீ நல்ல ஒரு குடிமகளாக வளர்ந்து, இந்த நாட்டிற்கு பங்களிப்பாய் என்று நம்புகிறேன்.’ என்று பதிலளித்துள்ளார்.