குடியரசு தினத்திற்குள் ஒடிசாவில் 5-ஜி சேவைகள் தொடங்கப்படும்- தொலைத்தொடர்பு அமைச்சர்
ஒடிசாவில் 5-ஜி சேவைகள் குடியரசு தினத்திற்குள் தொடங்கப்பட்டுவிடும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவிற்கு முன்னதாக ஒடிசாவில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவின் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் 5-ஜி சேவையை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஒடிசாவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்காக மொத்தம் ரூ.5,600 கோடியை மத்திய அரசு அனுமதித்துள்ளது, இதனால் குடியரசு தினத்திற்குள் ஒடிசாவில் 5-ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று வைஷ்ணவ் கூறினார். இப்போது, ஒடிசாவின் தொலைத் தொடர்புத் துறையை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று யாரும் குற்றஞ்சாட்ட முடியாது என்று அவர் மேலும் கூறினார்.