பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை – மத்திய அரசு
பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க டாடா நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டு சோதனை என தகவல்.
பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க டாடா நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டு சோதனை நடத்தப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. அக்.1ம் தேதி இந்தியாவில் முதல்முறையாக அறிமுகமான 5ஜி சேவை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் அமலுக்கு வந்துள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் படிப்படியாக நாடு முழுவதும் இதனை விரிவுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் 3 முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. அதில், ஏர்டெல், ஜியோ தங்கள் பயனர்களுக்கு 5ஜி சேவை வழங்குகின்றன. இந்த நிலையில், பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.