விறுவிறுப்பான 5ஜி ஏலம்.! நான்கு நாள் முடிவில் 1.49 லட்சம் கோடி…
இதுவரை 1.49 லட்சம் கோடி வரையில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் கேட்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கிவிட்டது. இந்த நிகழ்வு நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானியின் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ள 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்றுடன் நான்கு நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில், 23வது சுற்று வரை எலம் முடிந்துள்ளது. கடந்த ஏலத்தில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ரூ.1,49,855 கோடி வரை 5ஜி அலைக்கற்றையை ஏலம் கோரியுள்ளன. நான்கு சுற்றுகள் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை தொடக்க நாளில் 1.45லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை ஏலம் எடுக்க விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருந்தன.