5௦௦-ரூபாய்க்கு ஏ.டி.எம் நம்பர், பின் நம்பர், சி.வி.வி நம்பர் : ம.பி
மத்திய பிரதேசம் :
இந்தியர்களின் வங்கி கணக்கு விபரங்கள் ருபாய்-5௦௦-க்கு விற்பனை செய்யபடுவதை மத்திய பிரதேசத்தை சைபர் க்ரைம் கண்டுபிடித்துள்ளது
இவர்கள் ஏடிஎம் நம்பர், பின் நம்பர், சிவிவி நம்பர், கிரெடிட் கார்ட் நம்பர் ஆகியவை விற்கப்பட்டது கண்டுபிடிக்க பட்டுள்ளது.
லாகூரிலிருந்து செயல்படும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய சதிச் செயலில் தொடர்பு இருந்துள்ளது. வங்கித் துறையைச் சேர்ந்த ஜெய்கிருஷண் குப்தா என்பவர் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி போலீஸில் புகார் செய்திருந்தார். அதில் அவரது வங்கிக் கணக்கில் ₹72,401 தொகை அவருக்குத் தெரியாமலேயே அவரது கிரெடிட் கார்டு மூலம் திருடப்பட்டுள்ளது என்று கூறியிருந்த்தார்.
இது தொடர்பான விசாரணையில், அந்த கிரெடிட் கார்டு மூலம் மும்பையைச் சேர்ந்த ராஜ்குமார் பிள்ளை என்பவர் விமான பயண டிக்கெட் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜ்குமார் பிள்ளை மற்றும் அவரது கூட்டாளி ராம்பிரசாத் நாடார் ஆகியோரிடம் மத்தியப் பிரதேச புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் காக்னிசென்ட் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ராஜ்குமார் பிள்ளை என்பதும், ராம்பிரசாத் நாடார், ஹெச்டிஎப்சி வங்கியில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
இவர்கள் ஓ.டி.பி கேட்காத வகையில் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடியுள்ளனர்.