இந்தியாவில் 59% நிறுவனங்கள் சம்பள உயர்வு கொடுக்க முடிவு.. ஆய்வில் தகவல்..!

Default Image

கொரோனாவின் இரண்டாவது அலைக்கு மத்தியில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கக்கூடும் என ஜீனியஸ் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பல நிறுவனங்கள் சம்பள உயர்வு கொடுக்கும் மனநிலையில் இருப்பதாக ஜீனியஸ் கன்சல்டன்ட்ஸ் கூறியது. இந்த சம்பள உயர்வு 5-10% வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜீனியஸ் கன்சல்டன்ட்ஸ் நடத்திய கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 1200 நிறுவனங்கள் அடங்கும். இந்த ஆய்வில் ஐடி,பிபிஓ, வங்கி, கட்டுமானம், பொறியியல், கல்வி, மீடியா, மருத்துவம், மின்சாரம் மற்றும் எரிசக்தி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அடங்கும்.

இந்த நிறுவனங்களில் 59% நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் மனநிலையில் இருப்பதாகவும், 20% நிறுவனங்கள் சம்பளத்தை அதிகரிப்பார்கள் எனவும், 21% நிறுவனங்கள் சம்பளத்தை அதிகரிக்காது என்று கூறியுள்ளனர்.

கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் 43% புதியதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதாகக் கூறினர். அதே நேரத்தில், 41% நிறுவனங்கள் மாற்று ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளன. 11% நிறுவனங்கள் இந்த முறை யாரையும்  பணியமர்த்தும் நிலையில் இல்லை என தெரிவித்தனர். பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் புதியதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் முன்னணியில் இருக்கும் என்பது மற்றொரு சிறப்பு விஷயம்.

இதற்கு அடுத்ததாக மும்பையில் அதிக ஊழியர்களுக்கு வேலை வழங்கப்படும். இந்திய நிறுவனங்களின் நிலைமை வேகமாக முன்னேறி வருகிறது. இந்த  நிறுவனங்கள் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மோசமடைந்தது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. கொரோனா மீண்டும் தீவிரமாக அதிகரித்தால் பொருளாதார நடவடிக்கைகள் மோசமாக பாதிக்கப்படும்.

அத்தகைய சூழ்நிலையில், மீண்டும் ஊழியர்கள் வேலைகளில் இருந்து பணிநீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 11-ஆம் தேதி வரை வேலையின்மை விகிதம் 8.6% ஐ எட்டியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு 6.7% ஆக இருந்தது என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்