ஹரியானாவில் கஞ்சா விற்பனை செய்த இருவரிடமிருந்து 59 கிலோ கஞ்சா பறிமுதல்!
ஹரியானாவில் கஞ்சா விற்பனை செய்த இருவரிடமிருந்து 59 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள நஜாப்கர் எனும் இடத்தை சேர்ந்த ஹரேந்தர்என்பவரும் ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜார் எனும் மாவட்டத்திலுள்ள பஹதூர்கர் எனும் இடத்தைச் சேர்ந்த பூபிந்தர் மற்றும் ராஜேஷ் ஆகிய மூவர் கடந்த ஒரு வருடமாக ஆந்திராவிலிருந்து கஞ்சா பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்துள்ளனர். இது குறித்து போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களை பிடித்து விசாரித்தபோது ஆந்திரா விசாகப்பட்டினத்தில் இருந்து ஹரியானாவுக்கு கஞ்சாவை கொண்டுவர பயன்படுத்தப்பட்ட கார் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து 8 லட்சம் மதிப்புள்ள 59 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோவுக்கு 2 ஆயிரம் என அவர்கள் ஆந்திராவில் வாங்கி கொள்ளை லாபத்திற்கு ஹரியானாவில் விற்பனை செய்வதாகவும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.