வந்தே பாரத் மிஷனின் கீழ் இதுவரை 5,80,000 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!
வந்தே பாரத் மிஷனின் கீழ் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க தொடர்ந்த பணியில் இதுவரை 580,000 பேர் பயனடைந்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. 1 கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் 7 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக பாரத் மிஷன் எனும் விமான சேவை இந்தியாவில் துவக்கப்பட்டது. இதில் இதுவரை 5,80,000 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.