ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 237 பேர் பலியாகி உள்ளனர். 7,000 பேருக்கு மேல் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரானுக்கு புனித பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் சுமார் 2,000 பேர் அங்கு இருப்பார்கள் என தகவல் கூறப்பட்டது. பின்னர் ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து இந்தியர்களை மீட்டுவர உத்தரபிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து சி–17 என்ற விமானம் மருத்துவ குழுவுடன் நேற்று ஈரான் புறப்பட்டது.
அந்த விமானம் முதற்கட்டமாக 58 இந்தியர்களுடன் காசியாபாத் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில், சவாலான நேரத்தில் பணியாற்றிய ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் மருத்துவ குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய விமானப்படைக்கும் நன்றி என்றும் ஈரானில் இன்னும் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பணியாற்றி வருகிறோம் எனத்தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…