புனேயில், ஏப்ரல் 18ஆம் தேதியன்று 57 வயதான பிரிகேடியர் ஒருவர் ரயிலின் முன் குதித்து தற்கொலை.
புனேயில், ஏப்ரல் 18-ஆம் தேதியன்று 57 வயதான பிரிகேடியர் ஒருவர் ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக, ரயில்வே போலீஸ் நான்கு மூத்த ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஒரு அதிகாரி கூறுகையில், பிரிகேடியரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு இராணுவ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பிரிகேடியர் தரவரிசை அதிகாரி, ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் மேஜர் பதவிகளில் உள்ள இரண்டு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் பணியமர்த்தப்பட்ட பிரிகேடியர் ஏப்ரல் 18-ஆம் தேதி தனது பணியாளரின் காரில் புனே ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அவரிடம் இயக்க கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வேலை இருப்பதாக கூறிவிட்டு, பிளாட்பார்ம் எண் 3-ல் தண்டவாளத்தில் ஓடிய ரயிலின் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…